மோசமான பவுலிங்..இந்திய வீரருக்கு கண்டனம்.

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது .

போராடி தோல்வி

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2 ஓவர்களில் 5 நோ பால் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

37 ரன்கள்  பரிசாக 

மேலும் அவர் 37 ரன்களை வாரி கொடுத்தார். இலங்கைக்கு எதிரான போட்டியில் இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் மூன்று நோபால் வீசியதால் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் வழங்கப்பட்டது.

19-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் அந்த ஓவரில் இரண்டு நோபால் வீசி 18 ரன்களை வாரி வழங்கினார் , 5 நோபால்களுடன் 37 ரன்களை எதிரணிக்கு வழங்கிய அர்ஷ்தீப் சிங்கிற்கு கடும் கண்டணம் குவிந்து வருகின்றது. 

Posted on: 2023-01-06 11:15:50