விக்ரம் பட உதவி இயக்குனர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்த கமல்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு கார் பரிசாக வழங்கினார். கமல் லோகேஷ் கனகராஜுக்கு காரின் சாவியை அளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து விக்ரம் படத்தின் உதவி இயக்குனர்களுக்கு கமல்ஹாசன் சர்ப்ரைஸாக பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Sharing is caring!

Translate »