மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாது – நிமல் சிறிபால டி சில்வா…

மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை பார்வையிட்டு ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

மேலும் மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் எனவும், விமான நிலையத்தில் ஏற்படும் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .

Sharing is caring!

Translate »