பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்த பெருமை…!

கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22வது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3வது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.

S&P குளோபல் மார்க்கெட்டிங் இன்டெலிஜென்ஸ் சமத்திர, வர்த்தக மற்றும் விநியோகப் பிரிவு மற்றும் உலக வங்கியின் உலகளாவிய போக்குவரத்து நடவடிக்கை ஆகியவற்றுடன் இணைந்து வெளியிடப்படும் CPPI அல்லது கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டில் 2021 இந்தத் தரவுகள் பதியப்பட்டுள்ளன.

இலங்கையின் துறைமுக அபிவிருத்திக்கான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பிரசாந்த ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகமானது 2021 ஆம் ஆண்டில் 7.25 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் திறனைக் காட்டியுள்ளது மற்றும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 2மூ மேலும் வளர்ச்சியடைந்துள்ளது.

Sharing is caring!

Translate »