புரோ லீக் ஆக்கி போட்டி: பெனால்டி ஷூட்-அவுட்டில் பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா…

புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 9 நாடுகளை சேர்ந்த ஆக்கி அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்தியா-பெல்ஜியம் இடையிலான லீக் ஆட்டம் பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் நேற்றிரவு நடந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் பெல்ஜியம் 3 கோல்களும் இந்தியா ஒரு கோலும் அடித்திருந்தன.

பின்னர் இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் ஹர்மன்பிரீத் சிங் 52-வது நிமிடத்திலும், ஜர்மன்பிரீத் சிங் 58-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதையடுத்து பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. இதில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. 13-வது லீக் போட்டி முடிவில் இந்தியா 10 வெற்றி, 3 தோல்வி என்று 29 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பெல்ஜியம் 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நெதர்லாந்து 31 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Sharing is caring!

Translate »