பிரபல வீராங்கனை மரணம்…சர்வதேச வீரர்கள் இரங்கல்

புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனையான சாரா லீ காலமானார். அவருக்கு வயது 30. சாராவின் திடீர் மரணம், மல்யுத்த உலகைச் சேர்ந்தவர்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி, அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஹோப் டவுன்ஷிப் பகுதியில் பிறந்தவர் சாரா லீ. இளம் வயதிலிருந்தே வலு தூக்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு புகழ்பெற்றார். கடந்த 2015-ம் ஆண்டு, டபிள்யூ.டபிள்யூ.ஈ (WWE) நடத்திய ‘டஃப் இன்ஃப்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்ற இருவரில் சாராவும் ஒருவர். சாரா லீயின் கணவர் வெஸ்டின் பிளேக்கும் மல்யுத்த வீரர்தான். இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், சாரா லீ நேற்று (அக்.7-ம் தேதி) மரணமடைந்ததாக அவருடைய தாயார் டெர்ரி லீ சமூகவலைதள பதிவில் தெரிவித்திருக்கிறார். ஆனால், சாரா லீ மரணமடைந்தது எப்படி எனும் விவரம் வெளியிடப்படவில்லை.

Sharing is caring!

Translate »