பத்தே நிமிடத்தில் செட்டிநாடு முட்டை பொடிமாஸ் செய்யலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

முட்டை – 5

பச்சை மிளகாய் – 2

வெங்காயம் – 1

சீரகம் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை: *

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும். * ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். * பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். * அடுத்து அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

* முட்டை நன்கு வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.

Sharing is caring!

Translate »