நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு படகில் சென்ற 36 பேர் கைது…

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்கள் .

இன்று அதிகாலை குறித்த கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவுஸ்ரோலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் இடைமறித்து சோதனையிட்டபோது அதில் 6 சிறுவர்கள் 6 பெண்கள் உட்பட 36 பேர் சட்டவிரோதமாக சென்றமை தெரியவந்துள்ளது .

இதனையடுத்து படகை வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அதில் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்வர்கள் உள்ளடங்குறார்கள் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர் .

மேலும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை பாணமை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!

Translate »