தனுஷ் படத்தின் புதிய அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்…

‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Sharing is caring!

Translate »