டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் திடீர் தீ விபத்து…

டெல்லியில் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நேற்று நள்ளிரவு 12.18 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உள்துறை அமைச்சகத்தில் உள்ள தொலைபேசி பரிமாற்ற அறையில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டதை அடுத்து தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வாகனங்களுடன் விரைந்தனர்.

பின்னர் தண்ணீரை பீய்த்து அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ” தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிகாலை 1.05 மணியளவில் தீயணைப்புத் துறையினரால் தீ அணைக்கப்பட்டது. இதுவரை தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை” என்றார்.

Sharing is caring!

Translate »