ஜி.வி. பிரகாஷ் படத்தின் புதிய அப்டேட்…

பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி. வி. பிரகாஷ் நடித்து வெளியான ‘பேச்சுலர்’, ‘ஐங்கரன்’, ‘ஜெயில்’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து இவர் நடித்துள்ள படம் ‘இடி முழக்கம்’ . இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கும் இப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் இறுதிக்கட்ட பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் படக்குழுவினர் ஒரு புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Sharing is caring!

Translate »