கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி…!

போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 2009ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கேத்ரின் மேயோர்கா என்பவர்,

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ லாஸ்வேகாஸ் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடுத்து இருந்தார்.

ஆனால் இதனை ரொனால்டோ மறுத்து வந்தார். இந்த வழக்கு லாஸ் வேகாஸ் நகர கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரொனால்டோவுக்கு எதிரான சாட்சியங்கள் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்,

Sharing is caring!

Translate »