காரில் தீ…காப்பாற்றிய நாய்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் வேலாயுதம்பாளையத்திலிருந்து தாந்தோன்றிமலைக்கு உறவினர்களை பார்க்க காரில் சென்று கொண்டிருந்தார். கார் கரூர் கோவை சாலையில் பேருந்து நிலையம் அருகே வந்த போது காரின் முன்பக்கத்தில் திடீரென புகை வந்தது. இதை கண்ட மணியின் வளர்ப்பு நாய் தனது உரிமையாளருக்கு எச்சரிக்கை விடும் வகையில் குரைத்தது. இதனைக் கண்ட சாலையில் சென்றோர் காரைப் பார்த்தபோது காரின் முன் பக்க பேனெட்டில் திடீரென புகை வந்தது. இதனையடுத்து, அவசர அவசரமாக காரை விட்டு இறங்கிய மணி தனது செல்ல நாயை காரை விட்டு இறக்கி அருகே உள்ள தடுப்பு கம்பியில் கட்டி விட்டு திரும்பியபோது, கார் திடீரென தீப்பற்றி எறிந்தது. இது குறித்து காவல்துறையினருக்கும் தீயணைப்புதுறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மளமளவென தீப்பற்றி எரிந்த காரை பீய்ச்சியடுத்து அணைத்தனர். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு முற்றிலும் தீ அணைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய செல்ல நாயை மக்கள் பாராட்டி சென்றனர்.

Sharing is caring!

Translate »