ஒவ்வொரு சிகரெட்டிலும் அபாய எச்சரிக்கை…!

உலகிலேயே முதல்முறையாக ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைப்பிடிப்பதன் தீங்கு குறித்த அபாய எச்சரிக்கையை அச்சிடுவதைக் கட்டாயமாக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

அந்த நாட்டில், சிகரெட் பெட்டிகள் மீது புகைப்பதால் உடல்நிலத்துக்கு ஏற்படும் அபாயம் குறித்த எச்சரிக்கையை அச்சிடுவது 20 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டாயமாக்கப்பட்டது.

இந்த நிலையில், பெட்டிக்குள் இருக்கும் ஒவ்வொரு சிகரெட்டிலும் அத்தகைய அபாய எச்சரிக்கையை அச்சிடவேண்டும் என்பதைக் கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மனநலத் துறை அமைச்சா் கரோலின் பெனட் கூறியதாவது:

சிகரெட் பெட்டிகள் மீது அபாய எச்சரிக்கை பொறிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய தாக்கம் இத்தனை ஆண்டுகளில் மறைந்துபோயிருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், ஒவ்வொரு சிகரெட்டிலும் அபாய எச்சரிக்கை இருந்தால், அந்தத் தகவல் இன்னும் அதிக அளவில் மக்களை சென்று சேரும் என்றாா் அவா்.

உலகிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த திட்டம், அடுத்த ஆண்டின் மத்தியிலிருந்து அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Sharing is caring!

Translate »