உலக சாதனை படைக்குமா இந்திய அணி? – டிராவிட் விளக்கம்…

இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் கிரிக்கெட் டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

இந்திய அணி இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. நாளை நடைபெறும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று உலக சாதனையை இந்தியா படைக்கும்.

இந்நிலையில் இந்த உலக சாதனை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- நாங்கள் உலக சாதனை படைப்பது குறித்து கவனம் செலுத்தவில்லை.

என்னைப் பொறுத்தவரை சாதனைகளையும், எண்களையும் பற்றி கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற விரும்புகிறோம். நாங்கள் களம் இறங்குவதற்கு முன் எங்களை தயார் செய்துகொண்டு,

பயிற்சி செய்துகொண்டு அவற்றை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறோம். வலுவான தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கும்போது நம்முடைய பலமும் தெரியவரும். மேலும் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

நாங்கள் வெற்றி பெறுவது போல விளையாடினால் வெற்றி பெறுவோம், இல்லையென்றாலும் கற்றுக்கொண்டு அடுத்த விளையாட்டை விளையாடுவோம். இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார்.

Sharing is caring!

Translate »