இரட்டை சதத்தை தவறவிட்ட மிட்செல் – நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 553 ரன்கள் குவிப்பு…

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்திருந்தது.

டேரில் மிட்செல் 81 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் 67 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், 2-வது நாளான நேற்று மிட்செல், பிளெண்டல் இருவரும் தங்களது சதத்தை நிறைவு செய்தனர்.

அணியின் ஸ்கோர் 405-ஆக உயர்ந்த போது பிளன்டெல் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். டெஸ்டில் 5-வது விக்கெட்டுக்கு நியூசிலாந்து ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுதான்.

இதற்கு முன் நாதன் ஆஸ்டில், கிரேக் மெக்மில்லன் ஜோடி 2000-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 222 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேரில் மிட்செல் 190 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் 49 ரன்கள் எடுத்தார். இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் லீசு 34 ரன்கள் மற்றும் ஒல்லி போப் 51 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Sharing is caring!

Translate »