இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜசோழன் காலத்தில் இல்லை – கமல்

ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்பதே இல்லை, சைவம், வைணவம், சமணம் தான் இருந்தது என்று இயக்குநர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் பொன்னியின் செல்வன் படத்தை கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி ஆகியோர் பொதுமக்களுடன் அமர்ந்து பார்த்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ஒரு சிறந்த படத்தில் இவர்கள் நடித்துள்ளார்கள் என்பதை தாண்டி அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றார். தமிழ் சினிமாவிற்கு வயது நூறு, எனக்கு 67. இந்த நல்ல தருணத்தில் இவர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது எங்கள் தமிழ் படம். இவர்களுடன் சேர்ந்து படம் பார்த்ததில் மகிழ்ச்சி என்று கூறினார். தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜசோழன் காலத்தில் இல்லை. சைவம் வைணவம் சமணம் தான் இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று கூறினார். முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜசோழனை இந்து என்று திரிப்பதாக பேசியிருந்தார். அவரது பேச்சு விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் வெற்றிமாறன் கூறியதை கமல்ஹாசன் ஆமோதித்துள்ளார்.

Sharing is caring!

Translate »